சென்னை : இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்காவில் ஒரு முறை விளையாடச் சென்ற பொது தனக்கு நேர்ந்த அமானுஷ்ய அனுபவம் குறித்து ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அல்லாது ஐபிஎல் தொடரிலும் தனது தனித்துவமான திறமையால் பார்வையாளர்களை கட்டி இழுப்பவர் தான் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக். சர்வேதச போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் என்றாலே இடம்பெற்றிருக்கும் அணிக்காக சிறப்பாகவே விளையாடி வருவார்.
இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக பக்கபலமாக தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதன் பின் கடைசியாக எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு ஒரு சில போட்டிகளில் வர்ணனையாளராகவும் செயலாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் நேற்றைய நாளில் அதாவது சுதந்திர தின விழாவில் சிறப்பு வீடியோவாக தனியார் கிரிக்கெட் தொடர்பான செய்திகளை அளிக்கும் க்ரிக்பஸ் (Cricbuzz) தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்த வீடியோவை வெளியிட்டிருந்தனர். தினேஷ் கார்த்திக் ஆரம்ப கட்டத்தில் இந்தியா-A அணிக்காக விளையாடிய போது ஒருமுறை தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளச் சென்றிருந்தனர்.
அப்போது இந்திய அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில், அவருக்கு ஏற்பட்ட அந்த அமானுஷ்ய அனுபவத்தைப் பற்றி அந்த வீடியோவில் பேசி இருந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது, “நாங்கள் சன் சிட்டியில் தங்கியிருந்தபோது, ஒரு நேரத்தில் அறைக்குள் ஏதோ அசௌகரியமான உணர்வை உணர்ந்தேன்.
அது மிகவும் வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. அது என்னவென்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை, ஆனால் கண்டிப்பாக என்னால் சொல்ல முடியும் அது ஒரு வகையான அமானுஷ்ய உணர்வு” என்று க்ரிக்பஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் பேசி இருந்தார்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…