நான் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.. ஆனா வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி.. மிட்செல் சான்ட்னர்!

Mitchell Santner

நான் சிறப்பாக பந்து வீசவில்லை, ஆனால் உரிய வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி என்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பின் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் கூறியுள்ளார். ஐசிசியின் 13வது ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். இந்த சமயத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை நெதர்லாந்து அணி எதிர்கொண்டது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக ஆல்ரவுண்டர் மிட்சல் சான்ட்னர் 17 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 36 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் அணியின் ரன் குவிப்பிற்கு உதவினார்.  பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதிலும் குறிப்பாக நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்சல் சான்ட்னர் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனவே, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய சான்ட்னர் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தெர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய மிட்சல் சான்ட்னர், இந்த போட்டியில் எங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்ததால், பின்னாடி வரிசையில் எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது.

மேலும், இந்த ஆட்டத்தில் நான் என்னுடைய சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்றாலும், எனக்கு உரிய வெகுமதி பெற்றதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போட்டியில் மைதானம் உதவியதால் என்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் செய்ததைப் போல விக்கெட்டுகளை எடுக்க முடிந்தது. எங்களது அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.  இதனிடையே, ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்காக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னர் ஆவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்