‘முதல் போட்டி இப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது ..’ – மயாங்க் யாதவ் ஓபன் டாக்

Mayank Yadav 1 [file image]

Mayank Yadav : நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரரான மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பகிர்ந்திந்தார்.

நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரான இளம் வீரர் மயாங்க் யாதவ் நேற்றைய போட்டியின் முடிவில் அவர் தனது முதல் போட்டியின் அனுபவம் குறித்து பேசி இருந்தார். அவரது வேகத்தில் வெற்றி பெரும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி மொத்தமாக சரிந்து தோல்வியை தழுவியது. அவர் நேற்று போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார்.

இதன் மூலம் லக்னோ அணி, நேற்றைய போட்டியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து போட்டி முடிவடைந்த பிறகு மயாங்க் யாதவ் தனது முதல் போட்டியின் அனுபவத்தை பற்றி பேசி இருந்தார். அவர், “எனது அறிமுக போட்டி இவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

முதல் போட்டி என்பதால் சற்று பதற்றம் இருந்தது ஆனால் முதல் பந்தை வீசிய பிறகு அந்த பதற்றம் விலகியது. ஆரம்பத்தில் நான் மெதுவாக பந்து வீசலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் இந்த பிட்ச் எனது வேகத்துக்கு சாதகமாக அமைந்ததால் எனது அணியின் கேப்டன் என்னை வேகமாக பந்து வீச சொன்னார்.

எனக்கு மிகவும் பிடித்த விக்கெட் எனது முதல் விக்கெட் ஜானி பேர்ஸ்டோவ்வின் விக்கெட் தான். நான் சிறு வயதிலேயே அறிமுகம் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அது அப்படி அமையவில்லை. இன்று இரவு நான் விளையாடிய இந்த அறிமுக போட்டி எனக்கு மிகவும் சந்தோசமாக அளிக்கிறது” ,என்று மயாங்க் யாதவ் போட்டி முடிந்த பிறகு கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்