நேற்று நடந்த போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா ,நிதானமாகவும் ,அதிரடியாகவும் விளையாடி 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.சதம் அடித்ததை பற்றி பேசிய ரோஹித் சர்மா , நேற்றைய ஆட்டத்தில் இயல்பாக நான் ஆடவில்லை சிறிது மெதுவாகத்தான் தான் விளையாடினேன்.
சரியான பந்துகளை மட்டுமே பார்த்து அடித்து விளையாடினேன். நேற்றைய இப்போட்டியில் நான் அடிக்க விரும்பிய ஷாட்களை அடிக்க முடியாமல் போனது. ஆரம்பத்தில் குறைந்த ரன்கள் எடுத்தாலும் மெதுவாக ஆட நினைத்தேன். மேலும் கூட்டணியை வலுப்படுத்த முடிவு செய்தேன்.
இந்திய அணியில் அனைவரும் சிறப்பான வீரர்கள் தான் அதனால் தன் கடந்த 2 வருடமாக வலுவான அணியாக இந்திய அணி உள்ளது.அனைத்து வீரர்களுக்கும் பொறுப்பு உள்ளது.சில நேரங்களில் யாராவது ஒரு வீரர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடுவர்கள் என கூறினார்.
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…