அப்போ சரியா செஞ்சேன் இப்போ இல்லை…ஜாகீர் கானுடன் புலம்பிய ரோஹித் சர்மா!

லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா ஜாகீர் கானுடன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Rohit Sharma Zaheer Khan

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர் ரோஹித் சர்மா எப்போது பார்முக்கு திரும்புவார் என்பதில் தான் இருக்கிறது. ஏனென்றால், இந்த சீசனில் அவர் 3 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில் மொத்தமாக 21 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். எனவே, அவருடைய பேட்டிங் மீது விமர்சனங்களும் எழ தொடங்கியுள்ளது.

இப்படியான மோசமான பார்மில் இன்று மும்பை லக்னோ அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி பழைய பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் நிலையில், ரோஹித் சர்மா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் மென்டரான ஜாகீர் கானுடன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரோகித் சர்மாவின் ஜாகீர் கானுடனான “கசிந்த” உரையாடல், மும்பை இந்தியன்ஸ் (MI) அணியைச் சுற்றிய சர்ச்சைகள் குறித்து ரசிகர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜாகீர் கானுடன் ரோஹித் பேசும்போது ” நான் செய்ய வேண்டியதை அப்போது சரியாகச் செய்தேன், இப்போது இல்லை” என்று கூறியுள்ளார்.

அதாவது ரோகித், மும்பை அணியை 2013 முதல் 2022 வரை ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர். எனவே,  “நான் செய்ய வேண்டியதை அப்போது சரியாகச் செய்தேன்” என்று இதனை குறிப்பிட்டு பேசியிருக்கலாம். இப்போது சரியாக செய்யவில்லை என்று அவர் குறிப்பிடுவது அணியில் கேப்டனாக இல்லை இருப்பினும் சிறப்பாக விளையாடவில்லை என்பதை சொல்லியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது ” நான் முன்னதாக கேப்டனாக மும்பை அணிக்கு இருந்தேன் இப்போது இல்லை அதனால் எனக்கு எண்ணம் வேறு மாதிரி இருக்கிறது என்று சொன்னால் அதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். என்னுடைய எண்ணம் முழுவதும் கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.  எனவே, அவர் பேசியதை வைத்து பார்க்கையில் அவர் இன்னும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட விரும்புவது தெரிகிறது. எனவே, வரும் போட்டிகளில் அவருடைய ஆட்டம் ஹிட்டாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்