நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசி குஜராத் அணியை வெற்றிபெற வைத்தார். இந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர் விராட் கோலியும் அதிரடியாக விளையாடி சதம் விளாசி பல சாதனைகளை படைத்தார்.
நேற்று போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 6 சதங்கள் எடுத்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 7 சதங்கள் அடித்து விராட் கோலி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிறிஸ் கெய்ல் “என்னுடைய சாதனையை கோலி கடந்துவிட்டார். நான் ஓய்வில் இருந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருகிறேன். அடுத்த வருடம் விராட் சாதனையை முறியடிப்பேன்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.
மேலும், ஐபிஎல்லில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் பெங்களூர் வீரரும் விராட் கோலி தான். மேலும், கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…