‘அவர் ஆட்டம் நம்பவே முடியல ..’ ! ஹர்திக் பாண்டியா ஓபன் டாக் !!

HARDIK PANDIYA

ஐபிஎல் 2024 : நேற்றைய போட்டியில் மும்பை அணி, பஞ்சாப் அணியை வீழ்த்திய பிற்பாடு ஹர்திக் பாண்டியா பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப், மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் 192 ரன்கள் எடுத்தனர். அதன் பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகள் நழுவ விட்டு சரிந்தாலும். அசுதோஷ் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி சரிவிலிருந்து மீண்டு வெற்றியின் விழும்பு வரை சென்று 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மும்பை அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 53 பந்துக்கு 78 ரன்கள் எடுத்தார். பும்ராவின் அட்டகாசமான பந்து வீச்சு மும்பை அணியின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பாக அமைந்தது. அவர் 4 ஓவர்கள் பாத்து வீசி 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதுடன் இந்த தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளை எடுத்து பர்புள் தொப்பியையும் கைவச படுத்தி உள்ளார்.

வெற்றிக்கு பின் மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா அணியின் வெற்றி காரணத்தை குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “உண்மையில் இது ஒரு சிறந்த போட்டியாகும் எங்கள் அனைவரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எங்கள் திறமைகளை இந்த போட்டி நன்றாக சோதித்தது. மேலும், இது போன்ற நிலைமை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் போட்டிக்கு முன் விவாதித்தோம். அது தான் இன்று நடைபெற்று உள்ளது.

இந்த போட்டியில் நாங்கள் முன்னிலையில் இருப்பதாக உணர்ந்தாலும் இந்த் போட்டியில் அசுதோஷின் ஆட்டம் நம்ப முடியாததாக இருந்தது. நான் அவரது வருங்கால கிரிக்கெட் கேரியரை பற்றி நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். மேலும், இந்த போட்டியில் நாங்கள் கொஞ்சம் சிந்திக்கவும், திட்டங்களை மாற்றவும் தருணங்கள் இருந்தன, இறுதியில் தற்போது எங்கள் அணிக்கு ஒரு வெற்றி கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்