இனவெறி பேச்சு: சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்” – வார்னர் வருத்தம் !

Default Image

சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி குறித்து பேசிய நிலையில், அவர்களின் செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 3 ஆம் டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.

சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ரா மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 3 ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் ரஹானே, அஷ்வின், நடுவர்களாக பால் ரீஃபல் மற்றும் பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உட்பட பலரும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா ரசிகர்கள் செய்த இந்த செயலுக்காக சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்த அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், இனவெறி தொடர்பான ரசிகர்களின் கருத்திற்கு முகமது சிராஜ் மற்றும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார். இதுபோன்ற செயலை பொறுத்துக் கொள்ள முடியாது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், ஆஸ்திரேலிய மக்களிடம் இருந்து சிறப்பான ஒன்றையே எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்