“உங்கள் அனைவரையும் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்” கபில்தேவ்..!

Default Image

உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளார்.  கடைசியாக கடந்த 1994 ஆம் ஆண்டு விளையாடினார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்கள் மேற்பட்ட ரன்களும் 400க்கும் மேற்பட்ட விக்கெட்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று கொடுத்தவர்.

இந்த நிலையில் கபில்தேவ் மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24 ம் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் இதனை தொடர்ந்து கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். உங்கள் அக்கறைக்கும் விருப்பத்திற்கும் மிகவும் நன்றி எனவும் கூறியுள்ளார். மேலும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” நீங்கள் திரும்பி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்