Shashank [file image]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் ஏலத்தில் பஞ்சாப் அணியால் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.
ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக நடைபெற்ற நேற்றைய போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்த பஞ்சாப் அணி ஷஷாங் சிங் அதிரடியால் த்ரில் வெற்றியை பெற்றது. குஜராத் அணி நிர்ணயித்த 200 என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி.
பஞ்சாப் அணியில் அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான் 1 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற பஞ்சாப் அணியின் வெற்றி அப்போதே கேள்வி குறியாக மாறியது. அதன் பின் அபார பந்து வீச்சின் மூலம் குஜராத் அணி, பஞ்சாப் அணியை திணற வைத்தது. நேற்று சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி 15 ஓவர்கள் வரை ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.
மேலும், ஒரு முனையில் ஷஷாங் சிங் மட்டும் தனியாக நின்று போராடி கொண்டிருந்தார். இறுதி வரை அவர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இதில் ஆச்சர்யம் அடையும் விஷயம் என்னவென்றால் ஐபிஎல் 2024 ஏலத்தின் போது தவறுதலாக பஞ்சாப் அணி ஷஷாங் சிங்கை ரூ.20 லட்சத்திற்கு எடுத்தனர்.
பஞ்சாப் அணி எடுக்க நினைத்தது இளம் வீரரான ஷஷாங் சிங்கை ஆனால், பெயரும், இருவரின் ஆரம்ப தொகையும் ஒன்றாக இருந்ததால் குழப்பத்தில் பஞ்சாப் அணி 31 வயது நிரம்பிய ஷஷாங் சிங்கை எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி அப்போதே தவறுதலாக இந்த ஷஷாங் சிங்கை எடுத்து விட்டோம் நாங்கள் இவரை தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்வோம் என்று X தளத்தில் பதிவிட்டிருந்தனர்.
ஆனால், நேற்றைய போட்டியில் கிடைத்த அந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்தி தோல்வியின் விழும்பில் இருந்த பஞ்சாப் அணியை அவரது அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற வைத்து “நீங்கள் எடுத்த ஷஷாங் சிங் சரியானவர் தான் ” என்று உறுதி செய்திருக்கிறார். இதன் மூலம் பஞ்சாப் அணியும் இவரை தேர்வு செய்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…