நான் டக் அவுட்டாகியது சச்சினையா.. என்னாலே நம்பமுடியலே!

Default Image

இந்திய அணியின் பந்துவீச்சில் சிறந்தவராக விளங்குபவர், புவனேஸ்வர் குமார். கடினமான சூழலிலும் தனது பந்துவீச்சில் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர். இந்நிலையில், இவர் 2008-2009 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தினார்.

இதுகுறித்து அவர் “கிரீக்பஸ்”-ஸில் பேட்டியளித்த அவர், 2008-09 ஆம் ஆண்டில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் மும்பை-உத்திர பிரதேச அணிகள் மோதினர். அப்பொழுது மைதானத்திற்குள் சச்சின் பேட்டிங் பிடிக்க பிட்சுக்குள் வந்தார். நான் அவருக்கு பந்துவீச எதிர்திசையில் நின்றேன். நான் அவரை வாய்த்த கண் வாங்காமல் பார்த்தேன்.

முதல் பந்தை நான் வீசினேன். அதை அடித்த சச்சின், பீல்டர் கைக்கு கேட்ச் குடுத்தார். அப்பொழுது நா அவுடாக்கியது சச்சின் என எனக்கு தெரியவில்லை சாதாரண பேட்ஸ்மேனென நினைத்தேன். ஆனால் மைதானத்தை விட்டு வெளியே வந்தப்பின்தான் நான் அவுட்டாகியது இனிய அணியின் ஜாம்பவான் சச்சின் என தெரிந்தது.

நான் சச்சினை அவுட்டாகியது குறித்த செய்தி, நாளிதழில் வெளிவந்தது. அப்பொழுதுதான் நான் பெரிதளவில் சாதனை செய்ததுபோல உணர்ந்தேன். அந்தசமயத்திலிருந்து தான் எனது கிரிக்கெட் வாழ்கை தொடங்கியது என புவனேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்