“அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை” – வருண் சக்கரவர்த்தி!
அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆயத்தமாகி வருகிறார்கள். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தொகுப்பாளர் அவரிடம், “இந்திய அணியில் தமிழ்நாடு வீரராக அஸ்வின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்.
இப்போ இருக்கிற தமிழ்நாடு வீரர்களில் நீங்களும், வாஷிங்டன் சுந்தர் தான். நீங்க அஸ்வினோட இடத்தை நிரப்புவதற்கு என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொண்டு வாறீங்க? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வருன், ” நீங்க அவருடன் கம்பேர் பண்ணாதே பெரிய விஷயம், நான் ஒரே ஒரு பார்மட்டில் தான் ஆடி வருகிறேன்.
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு என்னை அணியிலிருந்து டிராப் செய்தார்கள். அது என்னை இன்னும் உழைக்க வைத்தது, இன்னும் என்னுடைய பந்துவீச்சில் சில மாற்றங்களை கொண்டு வர செய்தது. இப்போதுதான் கம்பேக் கொடுத்திருக்கிறேன், அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கு. நீண்ட காலத்திற்கு இந்திய அணியில் ஆட என்ன செய்ய வேண்டுமோ அதில் தான் என்னுடைய கவனம் முழுக்க உள்ளத” என்று கூறினார்.