ஒட்டுமொத்தமாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது-விராட்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது.
3 -வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார்.அதேபோல் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 93 ரன்கள் அடித்தார்.இந்தியாவின் பந்துவீச்சில் சமி 3, சாஹல்,புவனேஸ்வர் குமார் ,பாண்டியா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனால் இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 62 ரன்கள் குவித்தார்.இந்திய வீரர்கள் அம்பத்தி ராயிடு 40* தினேஷ் கார்த்திக் 38* இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக விராட் கூறுகையில், இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்காமல் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் தீவிரத்துடன் வீரர்கள் ஆடுகின்றனர். பவுலிங் நன்றாக உள்ளது ஷமி நல்ல வேகம் வீசுகிறார், புவனேஷ்வர் நல்ல இடங்களில் வீசுகிறார். இன்று ஹர்திக் சிறப்பாக வீசினார், குல்தீப், சாஹல் தரமான வீச்சாளர்கள். ஒட்டுமொத்தமாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.