நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன்- டீன் ஜோன்ஸ்..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார்.

கூகுளில் “Dhoni” என தேடுனாலே அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு கோபப்பட்டால், தனது கோபத்தை வீரர்களிடம் காட்டமாட்டார் என்பதே.

இந்நிலையில் தோனியை பற்றி சில கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்தவகையில் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் சமீபத்தில் கூறிய பேட்டி ஒன்றில் நான் தோனியின் மிகப்பெரும் ரசிகன். இந்தியாவின் தலை சிறந்த 6 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தோனி இருப்பார். மேலும் இந்த ஐபிஎல்-ல் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டார் என்றால் வரும் உலகக் கோப்பை மீது வேறு யாரும் கவனம் வைக்கத் தேவையில்லை. என்றும் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்