தொடர் தோல்வியில் சென்னை.. ஹைதராபாத் அணி அபார வெற்றி..!

SRHvCSK

ஐபிஎல் 2024 :ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஹைதரபாத் முடிவு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஹைதராபாத் அணியில் பாட் கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது, நடராஜன்,  புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே  45 ரன்களும், ரகானே 35 ரன்களும், ஜடேஜா 31 ரன்களும் எடுத்தனர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் , அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி வெறும் 12 பந்தில் 4 சிக்ஸர் , 3 பவுண்டரி என மொத்தம் 37 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஐடன் மார்க்ராம், டிராவிஸ் ஹெட் இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்தபோது ரச்சின் ரவீந்திரவிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து ஷாபாஸ் அகமது களமிறங்க ஏற்கனவே களத்தில் இருந்த ஐடன் மார்க்ராம் சிறப்பாக விளையாடி 35 பந்தில் அரைசதம் அடித்தார்.

அரைசதம் அடித்த அடுத்த பந்தில் ஐடன் மார்க்ராம் அவுட் ஆனார். இறுதியாக அணி ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் மொயின் அலி 2 விக்கெட்டையும்,  தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

சென்னை  மற்றும் ஹைதராபாத் அணி தலா  4 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றியையும், 2 போட்டியில் தோல்வியையும் பெற்றுள்ளது. சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளது. கடந்த போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வி தழுவியது. இன்று ஹைதராபாத் அணியிடம் சென்னை தோல்வி தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump
manoj bharathiraja and bharathiraja
ADMK Leaders meeti Amit shah - Edappadi Palanisamy says