15 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி..!
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி அணியும் – ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பெர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய பின்னர், அதிரடியாக விளையாடினர். கேப்டன் டேவிட் வார்னர் 45 ரன்கள் அடித்து வெளியேற, அதன்பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே, 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைதொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்க, சிறப்பாக விளையாடிய பெர்ஸ்டோவ் 53 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், கேன் வில்லியம்சன் 41 ரன்கள் குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 162 ரன்கள் அடித்தது.
163 ரன்கள் இலக்குடன் டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். வந்த வேகத்தில் பிருத்வி ஷா 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர். பிருத்வி ஷா போல வந்த வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாக விளையாடி வந்த தவான் 34 ரன்னில் வெளியேறினர். இதைத்தொடர்ந்து, ரிஷாப் பந்த் 28
ஹெட்மியர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.
இதனால், ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.