ஐபிஎல் 2024 : ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி..!

Published by
murugan

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 64 ரன்களும், அப்துல் சமது 25 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல், சாம் கரன் தலா 2 விக்கெட்டையும்,  ரபாடா 1 விக்கெட்டை பறித்தனர். 183 ரன்கள் இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.

2-வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த  பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார்.  அடுத்த சில நிமிடங்களில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 14 ரன் எடுத்து வெளியேற அடுத்துகளமிறங்கிய  சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 28, ஜிதேஷ் சர்மா 19 ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 46* ,  அசுதோஷ் சர்மா 33*ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ், நடராஜன், நிதிஷ் ரெட்டி, ஜெய்தேவ் உனட்கட் 1 விக்கெட்டையும் பறித்தனர்.

இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் ஹைதராபாத் அணி 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

Published by
murugan

Recent Posts

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

5 minutes ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

8 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

38 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

1 hour ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

2 hours ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

2 hours ago