ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் அணி முதலில் இறங்கி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன் எடுத்தார். 150 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக டேவிட் வார்னர், விருத்திமான் சஹா இருவரும் களமிறங்கினர். களம் இறங்கிய வேகத்தில் விருத்திமான் சஹா ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே, வார்னர் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த மனிஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி அரைசதம் எடுத்து 54 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…