டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47 ஆம் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக மனிஷ் பாண்டே 44 ரன்கள் அடித்து, 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 2 விக்கெட்களை இழந்து, 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக நிர்ணயித்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் டெல்லி அணி சார்பாக நோர்ட்ஜ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரர்களான அஜின்கியா ரஹானே மற்றும் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் பெரிய ரன்களை அடிக்காமல் தடுமாற்றத்தை கண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி 19 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து, 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி பந்துவீச்சை பொறுத்தளவில் ரஷீத் கான் 3, சந்தீப் சர்மா மற்றும் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும், டெல்லி அணி சார்பாக ரிஷாப் பந்த் அதிகபட்சமாக 35 பந்துகளில் 36 ரன்களும், அஜின்கியா ரஹானே 19 பந்துகளில் 26 ரன்களும் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…