IPL2024: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அதிகப்பட்சமாக டிராவிஸ் ஹெட் 34 ரன்களும், ராகுல் திரிபாதி 37 ரன்களும், மத்தியில் களம் இறங்கிய விக்கெட் கீப்பர் கிளாசென் 50 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டையும் , சந்தீப் சர்மா 2 விக்கெட்டையும் பறித்தனர். 176 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர் இருவரும் களமிறங்கினார். வந்த வேகத்திலேயே வெறும் 10 ரன்கள் எடுத்து டாம் கோஹ்லர் நடையை கட்டினார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த மற்றோரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 42 ரன்கள் எடுத்திருந்தபோது அப்துல் சமதிடம் கேட்சைக் கொடுத்து விக்கெட் இழந்தார். அவர் 21 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசினார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் சஞ்சு சாம்சன் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ஐடன் மார்க்ராமிடம் கேட்சைக் கொடுத்து வெளியேறினார் .
அடுத்து வந்த ரியான் பராக் 6 ரன்னும், ஹெட்மியர் 4 ரன்னும், ரவிச்சந்திரன் அஸ்வின் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் சிக்ஸர் அடிக்க முயன்றபோது 6 ரன் எடுத்திருந்தபோது அபிஷேக் சர்மாவிடம் கேட்சை கொடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கிடையில் மத்தியில் இறங்கி நிதானமாக விளையாடி வந்த துருவ் ஜூரல் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் ரன்களுடன் இருந்தார். ஹைதராபாத் அணியில் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ், நடராஜன் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நாளை மறுநாள் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோத உள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று யார் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…