இதுதான் சிறந்த ஆட்டம்.. இந்த விதியால் தப்பிக்கும் அணிகள்.. பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

Pat Cummins

ஐபிஎல்2024: இதுதான் சிறந்த போட்டி என்று வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதியது. கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை போராடிய பஞ்சாப் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இப்போட்டியை காண வந்தவர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்தது என்றே கூறலாம். இந்த வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணி கேப்டன் கூறியதாவது, இந்த போட்டி ஒரு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் எதிரணியினர் நன்றாக பந்துவீசினார்கள். இருந்தாலும், 180 ரன்கள் எட்டுவதற்கு நாங்கள் சிறந்த பேட்டிங்கை கொடுத்தோம்.

அதனை தக்க வைக்கவும் முயன்றோம். இருப்பினும், இப்போட்டி மிகவும் நெருக்கமான போட்டியாக மாறிவிட்டது. இதில் குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் அனைத்து அணிகளுக்கும் பேட்டிங் அல்லது பவுலிங்கில் சாதகமாக உள்ளது.இந்த விதி மூலம் ஒவ்வொரு அணியிலும் பேட்டிங்கில் பலம் வாய்ந்தவையாக மாறுகிறது.

இது சாதகமானது கூட. இந்த போட்டியில் நாங்கள் ஒரு பாசிட்டிவாக தான் இருக்க முயற்சி செய்தோம். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது, ஏனென்றால் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசினார்கள். எப்படி இருந்தாலும் பவர் பிளேவில் அதிரடியாக இருக்க வேண்டும். எனவே, இந்த ஐபிஎல் தொடரில் 150 ,160 ரன்கள் எல்லாம் அடித்தால், 10 போட்டிகளில் 9 போட்டிகள் தோல்வி அடைய தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

புதிய பந்து போட்டிக்கு முக்கியமானது என்று எங்களுக்குத் தெரியும். அதன்படி, இந்த போட்டியில் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்துவது தான் வெற்றிக்கு ஒரே வழி என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். எங்கள் அணி 180 ரன்களை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நானும், புவியும் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்தோம். எங்களிடம் ஏராளமான இடது கை வீரர்கள், வலது கை வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்