Hyderabad broke RCBs 11-year record [File Image]
MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.
277 ரன்கள் அடிப்பது எல்லாம் டி20 கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் இல்லை. ஆனால், ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி இத்தனை ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாதனையையும் படைத்தது பெங்களூர் அணியின் சாதனையையும் முறியடித்து இருக்கிறது. அது என்ன சாதனை என்றால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனை தான்.
இதற்கு முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 263 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்அடித்த அணி என்ற சாதனையை வைத்து இருந்தது. தற்போது 11 ஆண்டுகால அந்த சாதனையை மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி முறியடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்கள் அடித்த அணிகள்
மேலும், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடி 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகள் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…