சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காநதி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரனும் மற்றும் அதர்வா டைடெவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதனால் பஞ்சாப் அணிக்கு ஒரு நல்ல தொடக்கமானது அமைந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அத்ரவா டைடெ 46 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்த விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ப்ரப்சிம்ரனும், ரைலி ரூசோவும் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார்கள் இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோரானது எகிற தொடங்கியது.
மேலும், அடுத்தடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினார்கள். இறுதியில், 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார். ஹத்ராபாத் அணியில் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதனை தொடர்ந்து 215 என்ற இமாலய இலக்கை எட்டுவதற்கு ஹைதராபாத் அணி களமிறங்கியது. ஹைதராபாத் அணியில் ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் ஹர்ஷல் பட்டெல்லின் முதல் பந்திலேயே போல்டாகி பெயிலியர் திரும்பினார். அதன் பிறகு ராகுல் திரிப்பத்தியும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடியாக விளையாட தொடங்கினார்கள்.
இருவரின் அதிரடியில் ஹைதராபாத் அணி இலக்கை நோக்கி எளிதாக நடந்து கொண்டே இருந்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ராகுல் த்ருப்பாத்தி 33 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் 28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய இருவரும் ஆட்டம் இழந்தாலும் நிதிஷ் ரெட்டியும், கிளாஸ்ஸனும் இணைந்து விளையாடினார்கள்.
37 ரன்களில் இருந்த நிதிஷ் ரெட்டி ஹர்ஷல் பட்டேல் பந்தில் ஆட்டமிழக்க போட்டி மேலும் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது. அதனை தொடர்ந்து கிளாஸ்ஸனும், ஷாபாஸ் அஹமதும் நிலைத்து விளையாடிய தொடங்கிய போது ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு அப்துல் சமாத் வந்த உடனே ஒரு சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார்.
மேலும், 12 பந்துக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் கிளாஸ்ஸன் தனது விக்கெட்டை ஹர்பிரீட் ப்ரார்ரிடம் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த சான்வீர் சிங் பந்தை பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று 2-ம் இடத்திற்கு முன்னேறிய ஹைதரபாத் அணி அடுத்து நடக்கவிருக்கும் ராஜஸ்தான்-கொல்கத்தா போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால். வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியுடன் அஹமதாபாத்தில் ஹைதராபாத் அணி விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…