மூச்சு திணற அடித்த ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் ..!! மும்பை அணிக்கு 278 ரன்கள் இலக்கு ..!!
![SRH 1st Innings [file image]](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/03/SRH-1st-Innings-file-imiage.webp)
SRHvsMI : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடிவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மும்பை பவுலர்களின் பந்து வீச்சை மரண காட்டு காட்டினார். அவரது அதிரடியில் மும்பை பவுலர்கள் எப்படி பந்து வீசலாம் என்று திணறினார்கள்.அதிரடி காட்டிய அவர் வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
அதன் பிறகு டிராவிஸ் ஹெட் வெறும் 22 பந்துகளில் 3 சிக்ஸர், 9 ஃபோர்களுடன் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஹைதராபாத் அணியின் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அவர் எங்கு விட்டு சென்றாரோ அதிலுருந்து தொடங்கினார். மும்பை அணி பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை நான்கு பக்கமும் சிதறடித்தார். அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 10 ஓவரில் 150 ரன்களை கடந்தது.
இதன் மூலம் வெறும் 16 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்த அபிஷேக் துரதிஷ்டவசமாக 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 3 ஃபோர்கள், 7 சிக்ஸர்களுடன் வெறும் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின் களத்தில் இருந்த கிளாசெனும், மார்க்ரமும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தனர். ஹைதரபாத் அதிரடியில் அந்த அணி 14.4 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.
அதனை தொடர்ந்து விளையாடிய இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்ட தொடங்கினார்கள். ஹைதராபாத் அணியில் களமிறங்கிய மயங்க் அகர்வாலை தவிர அனைத்து வீரர்களும் மும்பை பவுலர்களை துவம்சம் செய்தனர். மேலும், அதிரடி காட்டிய கிளாசெனும் இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2-வது அரை சதத்தை வெறும் 23 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
இறுதியாக, ஹைதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 62 ரன்களும், அபிஷேக் சர்மா 63, கிளாசென் 34 பந்துகளில் 80 ரன்களும், மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பின் 278 என்ற இமாலய இலக்கை எடுப்பதற்கு மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025