சதம் அடி நண்பா…’வைடு’ பந்தை தடுத்த சஞ்சு…வைரலாகும் அசத்தல் வீடியோ.!!

Published by
பால முருகன்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து. அடுத்ததாக 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ் தான் அணி வெற்றிபெற முக்கிய காரணம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் தான். குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 98 ரன்களை குவித்தார். 13 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனையும் படைத்தார்.

ஆனால், அவரால் சதம் மட்டும் அடிக்க முடியவில்லை. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில்,  13வது ஓவரில் ஒரு பந்து மீதமிருந்தது. அந்த நேரத்தில் சாம்சன் 28 பந்தில் 48 ரன்களில் இருந்தார், பந்து வீச்சாளர் சுயாஷ் பந்தை லெக் சைடில் வைடு திசையில் பந்து வீச முயற்சித்தார்.

அந்த பந்தை சாம்சன் தனது முன் காலை முழுவதுமாக நகர்த்தி வைடு சென்ற பந்தை தடுத்தார். அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்த்து போட்டியை முடிக்க ஒரு சிக்ஸர் அடித்து சதம் அடிக்குமாறு சாம்சன் சைகை காட்டினார். அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் 4 ரன்கள் மட்டுமே அடித்ததால் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.  இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் சஞ்சு சாம்சனை பாராட்டி வருகிறார்கள்.

மேலும், இதைப்போல 2014 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் விராட் கோலிக்காக ஒருமுறை தோனி செய்ததையும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

12 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

12 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

12 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

12 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

13 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

13 hours ago