டி20I : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி ஜூன் 9ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 34 ஆயிரம் இருக்கைகளுடன் நாசாவ் கவுண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஜூன் 9ம் தேதி நடைபெறும் அந்த முக்கியமான போட்டிக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்யலாம் மற்றும் அதன் விலை என்ன என்கிற விவரங்கள் பற்றி தேர்ந்து கொள்ளாலாம்.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விருப்பங்கள், பட்ஜெட்டுக்கு ஏற்றார் போலவும், விஐபிக்கான பிரீமியம் (VIP) இருக்கைகள் வரை இருக்கும். ஆரம்ப விலையானது 175 டாலர் (ரூ.14,599) என்று தொடங்கப்பட்டாலும் பிரீமியம் இருக்கைகள் முறையே 300 டாலர்கள் 400 டாலர்கள் (ரூ.25,027 – ரூ.33,370) வரை இருக்க கூடும்.
ஐசிசி நிலையான இருக்கைக்கான குறைந்தபட்ச விலையை 300 டாலர் (ரூ.25,000) என நிர்ணயித்துள்ளது. மேலும், பெவிலியன் மற்றும் பவுண்டரி கிளப் இருக்கைகள் 1,500 டாலர் முதல் 2,000 டாலர் (சுமார் ரூ.1,25,141 முதல் ரூ.1,66,855 வரை இருக்கலாம்) என நிர்ணயித்துள்ளது.
கார்னர் கிளப் மற்றும் டயமண்ட் கிளப் இருக்கைகள் அதாவது அங்கு இருக்கும் ஆடம்பரத்தின் உச்சத்தை விரும்புவோருக்கு, அதன் டிக்கெட்டுகள் முறையே 2,750 டாலர் (2,20,00 ஆயிரம்) மற்றும் 10,000 டாலர் (கிட்டத்தட்ட 8,30,00 ஆயிரம்) ஆகலாம்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…