இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.! டிக்கெட் புக் செய்வது எப்படி? விலையை கேட்டால் ஆடி போயிடுவீங்க!

Default Image

டி20I : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி ஜூன் 9ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 34 ஆயிரம் இருக்கைகளுடன் நாசாவ் கவுண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஜூன் 9ம் தேதி நடைபெறும் அந்த முக்கியமான போட்டிக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்யலாம் மற்றும் அதன் விலை என்ன என்கிற விவரங்கள் பற்றி தேர்ந்து கொள்ளாலாம்.

விலை விபரம்

இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விருப்பங்கள், பட்ஜெட்டுக்கு ஏற்றார் போலவும், விஐபிக்கான பிரீமியம் (VIP) இருக்கைகள் வரை இருக்கும். ஆரம்ப விலையானது 175 டாலர் (ரூ.14,599) என்று தொடங்கப்பட்டாலும் பிரீமியம் இருக்கைகள் முறையே 300 டாலர்கள் 400 டாலர்கள் (ரூ.25,027 – ரூ.33,370) வரை இருக்க கூடும்.

ஐசிசி நிலையான இருக்கைக்கான குறைந்தபட்ச விலையை 300 டாலர் (ரூ.25,000) என நிர்ணயித்துள்ளது. மேலும், பெவிலியன் மற்றும் பவுண்டரி கிளப் இருக்கைகள் 1,500 டாலர் முதல் 2,000 டாலர் (சுமார் ரூ.1,25,141 முதல் ரூ.1,66,855 வரை இருக்கலாம்) என நிர்ணயித்துள்ளது.

கார்னர் கிளப் மற்றும் டயமண்ட் கிளப் இருக்கைகள் அதாவது அங்கு இருக்கும் ஆடம்பரத்தின் உச்சத்தை விரும்புவோருக்கு, அதன் டிக்கெட்டுகள் முறையே 2,750 டாலர் (2,20,00 ஆயிரம்) மற்றும் 10,000 டாலர் (கிட்டத்தட்ட 8,30,00 ஆயிரம்) ஆகலாம்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

  • அதிகாரப்பூர்வ ICC டிக்கெட் இணையதளமான icc-cricket.com செல்லவும்.
  • அதில் டிக்கெட் பிரிவிற்குச் சென்று, “டிக்கெட்டுகளை வாங்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அப்போது தோன்றும் நியூயார்க்கில் உள்ள “Nassau County International Cricket Stadium” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர், இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை தேர்வு செய்யுங்கள்.
  • இதனை தொடர்ந்து உங்கள் இருக்கைகளைத் தேர்வு செய்வது மட்டும் இல்லாமல், உங்களுக்கு தேவையான இருக்கையின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இப்பொது, நீங்கள் வாங்க விரும்பும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை தேர்வு செய்யுங்கள்.
  • இதன் பின், பணம் செலுத்து ஆப்ஷனை தேர்வு செய்யவும், கட்டணம் செலுத்தியதற்கான உறுதிப்படுத்தலைப் பெற்று, உங்கள் டிக்கெட்டைப் பதிவிறக்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்