கோலி-சச்சின் டெண்டுல்கர் ஒப்பீடு குறித்து கருத்து தெரிவித்த கவுதம் கம்பீர், தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் கோலி, ரோஹித், மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரின் அதிரடியால் 373 ரன்கள் குவித்தது.
விராட் கோலி, இந்த போட்டியில் தனது 45ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திக்கு செய்த போது, இலங்கைக்கு எதிராக 9 சதங்களை அடித்து சச்சினின்(8 சதம்) சாதனையை முறியடித்தார், மேலும் உள்நாட்டில் 20 சதங்கள் அடித்து சச்சின் வைத்திருந்த 20 சதங்கள் சாதனையை தற்போது கோலி சமன் செய்துள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பிர், சச்சின் மற்றும் கோலியை நீங்கள் ஒப்பிட முடியாது. சச்சினின் காலகட்டத்தில், 30 யார்டு வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தது கிடையாது. இலங்கை அணியின் பௌலிங் சுமாராகவே இருந்தது, அவர்களின் பந்துவீச்சு என்னை கவர வில்லை என்று கூறியிருக்கிறார்.
இதயனையடுத்து கம்பிருக்கு, இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரு ரசிகர் கூறும்போது, இது ஒன்றும் புதிதல்ல கோலி சாதிக்கும்போது கம்பிர் அவர்மீது பொறாமை கொள்கிறார், இன்னும் பலர் கம்பிருக்கு இது தான் முழுநேர வேலை என்று கூறியுள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…