நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!
பெங்களூருக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது கடைசி தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 163ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த போட்டியில் டெல்லி வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எதிரணிக்கு சவாலாக அமைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை குறிவைத்து சால்ட் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது 3-வது ஓவரை வீச ஸ்டார்க் வந்தார். வந்த முதல் பந்துலயே ஒரு பிரம்மாண்டமான சிக்ஸரை லாங்-ஆன் பகுதியில் சால்ட் விளாசினார். அடுத்த பந்தில் பேக்வர்டு பாயிண்ட் பகுதியில ஒரு பவுண்டரி அடுத்ததாக மீண்டும் ஒரு பவுண்டரி அதன்பிறகு நோ பால் ஒன்று கிடைக்க ப்ரிஹீட்டில் ஒரு பவுண்டரி அடுத்ததாக சிக்ஸர் என முதல் 4 பந்துகளில் 24 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் 1 ரன் அடுத்ததாக லேக் பை மூலமாக ஒரு பவுண்டரியும் அந்த ஓவரில் கிடைத்த காரணத்தால் 30 ரன்கள் ஒரே ஓவரில் ஸ்டார்க் விட்டுக்கொடுத்தார்.
இது ஐபிஎல் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க் அதிகமாக கொடுத்த ரன்கள் பட்டியலிலும் சேர்ந்தது.
- 30 ரன்கள் vs DC, பெங்களூர் , 2025
- 25 ரன்கள் vs SRH, கொல்கத்தா, 2024
- 21 ரன்கள் vs LSG, விசாக், 2025
- 19 ரன்கள் vs RR, பெங்களூரு, 2014