இங்கிலாந்து ,ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டனும் , பேட்ஸ்மேனும் ஆன ஸ்மித் முதல் இன்னிங்ஸில் 144 ரன்னும் , இரண்டாவது இன்னிங்ஸில்142 ரன்னும் அடித்து அசத்தினார்.இதனால் அவருக்கு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து ஸ்மித் கூறுகையில் ,ஆஷஸ் தொடரில் முதல் வெற்றி சிறப்பான ஓன்று. இங்கிலாந்தில் விளையாடுவது பிடித்து உள்ளது.எங்களது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.முதல் போட்டியில் வெற்றி பெற்றது ஊக்கமளிக்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் விளையாடுவது பெருமையாக உள்ளது.நான் முதல் முதலாக ஆஸ்திரேலிய அணிக்காக முதல் சத்தத்தை அடித்த போது எப்படி உணர்தேனோ அந்த அளவை விட அதிகமான மகிழ்ச்சியில் உள்ளேன்.
18 மாதங்கள் தடையில் இருந்த போது என் நண்பர்கள் ,குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தினால் மீண்டும் இழந்த இடத்தை பிடித்து விட்டேன் இந்த வெற்றி தொடரும் என நம்புகிறேன் என கூறினார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…