ஹையா…4 விக்கெட் எடுத்துட்டேன்…மைதானத்தில் சாகசம் செய்த கிரிக்கெட் வீரர்…வைரலாகும் வீடியோ..!!

KevinSinclair

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது ஆட்டத்தால் மட்டுமின்றி, தனது கொண்டாட்டங்களிலும் முத்திரை பதித்தார் என்றே கூறலாம். ஏனென்றால், அந்த போட்டியில் ஒரு விக்கெட் இல்லை…இரண்டு விக்கெட் இல்லை…மொத்தமாக 4 விக்கெட்களை அலேக்காக தூக்கினார்.

நேற்று நடந்த அந்த போட்டியில் கெவின் சின்க்ளேர் பந்து வீசிய போது ரமீஸ் ஷாஜாத் மற்றும் விருத்தியா அரவிந்த் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பிறகு தனது விக்கெட்டைக் கொண்டாடும் வகையில் சின்க்ளேர் மைதானத்திற்குள்ளே கிரவுண்ட் பேக்ஃபிலிப் அடித்து கொண்டாடினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ‘அடடா 4 விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கெவின்  சாகசம் செய்கிறாரே’ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் கெவின் சின்க்ளேர் அபாரமாக செயல்பட்டார். அவர் 7.1 ஓவர்களில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் போட்டியை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்