சங்கக்கார சாதனையை முறியடித்த ஹிட் மேன் ! சச்சின் சாதனையை முறியடிப்பாரா?!
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி பங்களாதேஷ் அணியின் பந்துகளை பறக்க விட்டார். இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆடிய அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற பெறும் உதவியாக இருந்தது.
நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 92 பந்தில் 104 ரன்கள் எடுத்தார்.இதில் 7 பவுண்டரி ,5 சிக்ஸர் பறக்க விட்டார்.நடப்பு உலக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த நான்காவது சதமாகும். இதன் மூலம் ரோஹித் சர்மா உலகக்கோப்பை போட்டியில் விளையாடி ஐந்து சதத்தை நிறைவு செய்து உள்ளார்.
உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் சச்சின் 6 சதம் அடித்து உள்ளார்.அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 5 சதம் உள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் உலகக்கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.
சச்சின் – 6
ரோஹித் – 5 *
சங்கக்கார – 5
பாண்டிங் – 5