சர்வேதச போட்டியில் புதிய சாதனை படைத்த ஹிட்மேன்..!

Default Image

ரோஹித் சர்மா சர்வேதச போட்டியில் தொடக்க வீரராக 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா சர்வேதச போட்டியில் தொடக்க வீரராக மிக வேகமாக 246 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டியதன் மூலம் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். மேலும், ரோஹித் மேத்யூ ஹைடனின் சாதனையை முறியடித்தார். மேத்யூ ஹைடன் 251 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டினார். அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 15,000 ரன்களையும் கடந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக குறைந்த இன்னிங்சில் 11,000 ரன்களை எடுத்த சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். அவர் இந்த சாதனையை 241 இன்னிங்ஸில் சாதித்தார்.

தொடக்க வீரராக குறைந்த இன்னிங்ஸில் 11,000 ரன்களை எடுத்த முதல் 5 பேட்ஸ்மேன்கள்:

241 – சச்சின் டெண்டுல்கர்

246 – ரோஹித் சர்மா

251 – மேத்யூ ஹேடன்

258 – சுனில் கவாஸ்கர்

261 – கார்டன் கிரீனிட்ஜ்

நான்காவது இடத்தில் ரோஹித் சர்மா:

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரராக அதிக ரன்கள் அடித்ததில் ரோகித் சர்மா நான்காவது இடத்தில் உள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை ரோஹித் சர்மாவிற்கு முன்பாக சேவாக், சச்சின் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் உள்ளனர். ஒரு தொடக்க வீரராக இந்தியாவிற்காக அதிக ரன்கள் எடுத்த வீரரில் வீரேந்திர சேவாக், 16,119 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 15,335 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கவாஸ்கர் 12,258 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக ரோஹித் சர்மா உள்ளார்.

இந்தியா -இங்கிலாந்து இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 42 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்து 9 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் தற்போது ரோஹித் 47, புஜாரா 14 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்