ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர்களாக அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர். நிதானமான விளையாடிய அப்துல்லா ஷபீக் 20 ரன்களில் வெளியேற அவரை தொடர்ந்து இமாம்-உல்-ஹக் 36 ரன்கள் இருக்கும்போது ஹர்திக் பாண்டியா ஓவரில் கேட்ச் அவுட் ஆனார்.
பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வானும் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இருவரும் போல்ட் ஆனார்கள். பின்னர் களமிங்கிய அனைத்து பாகிஸ்தான் வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியாக பாகிஸ்தான் 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 191 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 16 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த கோலியும் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இப்போட்டியில் ரோஹித் 36 பந்தில் அரைசதம் விளாசினார். இப்போட்டியில் ரோஹித் சர்மா இதுவரை 6 சிக்ஸர் விளாசி உள்ளார். 9-வது ஓவரை ஹரிஸ் ரவூப் வீசினார். அந்த ஓவரில் 2-வது மற்றும் 5 -வது பந்தில் ரோஹித் சர்மா சிக்ஸர் அடித்தார். இதனால் அந்த ஓவரில் 14 ரன்களை இந்தியா சேர்த்தது. இதில் 5-வது பந்தில் தனது 4-வது சிக்ஸர் அடித்தபோது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 300 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றார்.
தற்போது களத்தில் ரோஹித் சர்மா 80* ரன்ககளும், ஷ்ரேயாஸ் ஐயர் 35* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…