ஒரே போட்டியில் 3 சாதனை… உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய ஹிட்மேன்..!
2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 45-வது லீக் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டியில் 8 போட்டிகளில் இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை, ஆனால் மறுபுறம் விளையாடும் நெதர்லாந்துக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது ஏனெனில் இந்த போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றால் அது சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறும். பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.
ரோஹித் 14,000 ரன்கள்:
நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா 12 ரன்கள் பெற்றால், சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 14 ஆயிரம் ரன்கள் அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க இருந்தார். இந்நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரராக 14 ஆயிரம் ரன்களை தொட்ட 3-வது வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார். இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோரால் மட்டுமே இந்த மைல்கல்லை எட்ட முடிந்தது. இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
2023 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக அந்த அணியில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். 8 போட்டிகளில் ரோஹித் 442 ரன்கள் எடுத்துள்ளார். அதே சமயம் கோலி 8 போட்டிகளில் 543 ரன்கள் குவித்துள்ளார்.
தொடக்க வீரர்களாக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்:
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வீரேந்திர சேவாக் படைத்துள்ளார். சேவாக் 400 இன்னிங்ஸ்களில் 16119 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 36 சதங்கள் மற்றும் 67 அரை சதங்களும் ஆகும். அதே நேரத்தில், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். சச்சின் 342 இன்னிங்ஸ்களில் 15335 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா 13988 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடததக்கது.
உலகக்கோப்பையில் கேப்டன் அடித்த அதிக சிக்ஸர்கள்:
ஒரே உலகக்கோப்பையில் கேப்டன் அடித்த அதிக சிக்ஸர் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை ரோஹித் சர்மா 23 சிக்ஸர் விளாசி உள்ளார்,
- 2023 உலகக்கோப்பை (ரோஹித் சர்மா)- 23 சிக்ஸர்
- 2019 உலகக்கோப்பை (இயோன் மோர்கன்) -22 சிக்ஸர்
- 2015 உலகக்கோப்பை (ஏபி டி வில்லியர்ஸ்) -21 சிக்ஸர்
- 2019 உலகக்கோப்பை (ஆரோன் பிஞ்ச்) -18 சிக்ஸர்
- 2015 உலகக்கோப்பை (பி மெக்கல்லம் ) -17 சிக்ஸர்
ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள்:
ஒருநாள் போட்டியில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர் விளாசியவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இந்த வருடத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் மட்டும் இதுவரை 59 சிக்ஸர் அடித்துள்ளார்.
2023 ஒருநாள் போட்டி( ரோஹித் சர்மா ) -59 சிக்ஸர்
2015 ஒருநாள் போட்டி (ஏபி டி வில்லியர்ஸ்) – 58 சிக்ஸர்
2019 ஒருநாள் போட்டி (கிறிஸ் கெய்ல்) – 56 சிக்ஸர்
2020 ஒருநாள் போட்டி (ஷாஹித் அப்ரிடி)- 48 சிக்ஸர்