ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் விளாசிய வீரர்களின் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் தனது அணைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 25 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் விளாசினார். இந்த போட்டியில் சிக்ஸர் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் விளாசிய வீரர்களின் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார். இதுவரை ரோஹித் சர்மா 217 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும் தோனி 216 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் 351 சிக்ஸர்களுடன் உள்ளார் இரண்டாவது இடத்தில் 237 சிக்ஸர்களுடன் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…