அடுத்த போட்டியில் களமிறங்குகிறாரா ஹிட் மேன்..?
ரோஹித் சர்மா உடல் நிலை குறித்து டி காக் கூறியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள். 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். 4 முறை கோப்பையை வென்று சாதனை வைத்திருக்கும் மும்பை அணி 5 முறை கோப்பையை வெல்லும் நோக்குடன் அருமையாக விளையாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் காயம் ஏற்பட்டது இதனால் அடுத்த இரண்டு போட்டிகள் ரோஹித் சர்மா விளையாடவில்லை அவருக்கு பதிலாக மும்பை அணியில் பொல்லார்டு கேப்டன்ஷி பணியை ஏற்றுக்கொண்டார்.
மேலும் இதனை தொடர்ந்து வருகின்ற புதன் கிழமை மும்பை அணி பெங்களூர் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுகுறித்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் கூறியது ” ரோஹித் சர்மா குணமடைந்து வருகிறார். விரைவில் விளையாட வருவார். என்றும் கூறியுள்ளார்.