அடிக்கு மேல் அடி…! தொடர் சோகத்தில் தத்தளிக்கும் ஹர்திக் பாண்டியா !

hardik pandya sad

ஹர்திக் பாண்டியா : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வந்தார். அந்த விமர்சனங்களால் ஏற்கனவே மனம் உடைந்து போன ஹர்திக் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதன் காரணமாக விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவாக மாறி அவருக்கு பாராட்டுகளை பெற்று கொடுத்தது. இருப்பினும், அடுத்தடுத்து அவருக்கு சோகம் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால், ஹர்திக் பாண்டியா தன்னுடைய காதல் மனைவி நடாசா ஸ்டான்கோவிக்கை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலே இது மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்திக் தான் அடுத்த கேப்டன் என ரசிகர்கள் நினைத்து கொண்டு இருந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அவருடைய பெயரை அறிவிக்கப்படவில்லை என்பது  ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும், விவாகரத்து குறித்து ஹர்திக் பாண்டிய கூறியதாவது ” 4 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, நடாசாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்து எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம், இது எங்கள் இருவருக்கும் சிறந்த நலன் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை மற்றும் தோழமை மற்றும் நாங்கள் ஒரு குடும்பமாக வளர்ந்ததால், நாங்கள் எடுக்க இது ஒரு கடினமான முடிவாகும்.

அகஸ்தியரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர் நம் இருவரின் வாழ்க்கையின் மையத்திலும் தொடர்ந்து இருப்பார், மேலும் அவருடைய மகிழ்ச்சிக்காக நம்மால் முடிந்த அனைத்தையும் அவருக்கு வழங்குவதை உறுதிசெய்ய நாங்கள் ஒத்துழைப்போம். இந்த கடினமான மற்றும் முக்கியமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் உண்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்” என அறிவித்து இருந்தார். தொடர்ச்சியாக இப்படியான வேதனைகளை சந்தித்து வரும்  ஹர்திக் பாண்டியாவுக்கு அவருடைய ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்