இடுப்பில் ஏற்பட்ட காயம்.. மைதானத்தில் சுருண்டு விழுந்த வார்னர்.!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணிக்கு 390 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 338 ரன்கள் எடுத்து 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் போட்டியின் பாதியில் வெளியேறினார். நான்காவது ஓவரில், ஷிகர் தவான் பந்தை மிட்-ஆஃப் சைடு நோக்கி அடிக்க பந்தை வார்னர் குறுக்கே வந்து பந்தைத் தடுக்க ஒரு டைவ் அடித்தார். அவர் இரண்டாவது முறையாக உருட்டும்போது காயம் ஏற்பட்டது என்று தெரிகிறது. இதனால், வார்னர் களத்திலேயே சுருண்டு விழுந்து நடக்க முடியாமல் துடித்தார்.
Some bad news for Australia fans ????
David Warner has limped off the field after appearing to have hurt his groin while fielding in the second innings.#AUSvINDpic.twitter.com/8whmf2nEDD
— ICC (@ICC) November 29, 2020
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இருக்கும் பெவிலியன் பகுதி பின் பக்கத்தில் கார் ஒன்று வந்தது. அதில், வார்னரை மருத்துவமனை அழைத்து செல்வதற்காக அந்த கருப்பு கார் வந்தது,பின்னர் அதில் வார்னர் ஏறி மருத்துவமனை சென்றார்.