இந்தியாவிற்கு எதிராக அதிக சதம்.. ஸ்மித் படைத்த சாதனை.!
இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்களில் 9 சதமடித்து ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 327/3 ரன்கள் குவிந்திருந்தது. டிராவிஸ் ஹெட் 146* ரன்கள் மற்றும் ஸ்மித் 95* ரன்களுடனும் இன்றைய 2ஆம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா இன்று தொடர்ந்தது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்மித் சதமடித்தார். இது ஸ்மித்துக்கு டெஸ்ட் போட்டிகளில் 31 ஆவது சதமாகும். அவர் இந்தியாவிற்கு எதிராக அடிக்கும் 9-வது சதமாகும். இதன்படி இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த(9சதம்) இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் சாதனையை ஸ்மித் இந்த போட்டியில் சதமடித்து சமன் செய்துள்ளார்.