நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பரவசத்தில் பிராவோவின் முதுகில் ஏறிய ஹெட்மயர்
துபாயில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனின் இந்த 50 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்ற பரவசத்தில் ஹெட்மியர்சக நாட்டு வீரர் பிராவோவின் முதுகில் ஏறிய வீடியோ வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் வெற்றி மூலம் டெல்லி 13 போட்டிகளில் 10 போட்டிகளில் 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு சென்றது. சென்னை 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலில் இறங்கிய சென்னை 136 ரன்கள் எடுக்க 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரை வீசிய பிராவோ, நான்காவது பந்து வீசியபோது அதை ரபாடா பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
அப்போது மறுபுறம் களத்தில் நின்ற ஹெட்மியர் டெல்லி அணி போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பிராவோவின் முதுகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இப்போட்டியில் ஹெட்மயர் 28 எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். அதில், இரண்டு பவுண்டரிகளும், 1 சிக்ஸர் அடங்கும்.
டெல்லி அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மீதமுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இதற்கிடையில், சென்னை அணி வியாழன்கிழமை பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…