5 முறை சாம்பியன்… 2010 முதல் 2023 வரை…. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கோப்பை நினைவுகள்.!
5 முறை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி நினைவுகள் பற்றி இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன் முதலாக கோப்பையை வென்ற நாள் 2019 ஏப்ரல் 25ஆம் தேதி. மும்பை அணிக்கு எதிராக விளையாடி சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் முதன் முதலாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து .
இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற தினம் மே28, 2011. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சென்னை அணி கோப்பையை தன்வசமாக்கியது. இந்த முறை எதிர்த் துருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருந்தது. முதலில் பேட்டிங் அடிய சென்னை அணி 205 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆணி.
அடுத்ததாக இரண்டு வருடம் தடைக்கு பின்னர் கம்பீரமாக விளையாடி ஹைதராபாத் அணிக்கு எதிராக இறுதி போட்டியில் களம் இறங்கியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2018 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி மூன்றாவது கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 178 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 181 ரன்கள் எடுத்து 9 பந்துகளை மீதம் வைத்து அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
அடுத்ததாக 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 15 துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நான்காவது முறையாக கோப்பையை வென்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 192 எடுத்து இருந்தது. அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 165 ரன்கள் இருந்தது. 27 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று நான்காவது முறையாக கோப்பையை தன்வசமாக்கியது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அடுத்ததாக நேற்றைய போட்டியில் கடந்த முறை கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை அணி இறுதிப்போட்டியில் களம் இறங்கியது. மழை காரணமாக ஆட்டம் ஒரு நாள் தாமதமாகி நேற்று நடைபெற்றாலும், நேற்று மழை குறிக்கீடு காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் 15 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 214 ரன்கள் எடுத்திருந்தது அடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இறுதிவரை போராடி கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைமையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியை அடித்து ஐந்தாவது முறை சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்.
இந்த ஐந்து கோப்பைகள் மூலமாக மும்பை அணி சாதனையை சென்னை அணி தற்போது சமன் செய்துள்ளது. மும்பை அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஐந்து ஆண்டுகளில் கோப்பையை தன்வசமாகி உள்ளது தஎன்பது குறிப்பிடத்தக்கது.