IND vs ENG Day 2 Live: நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நேரலை இதோ!
Published by
Dinasuvadu desk
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் புஜாரா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்பு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 8 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பென் ஃபோக்ஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்நிலையில் இந்திய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.IND 62/3 (33.1)
Mar-4-2021 : இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிந்துவிட்டது. இந்திய அணி 12 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் அடித்துள்ளது.
Mar-4-2021 16 :16 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார் மூன்றாவது பந்தில் சுப்மான் கில் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
Mar-4-2021 16:06 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கியுள்ளனர்.
Mar-4-2021 15:32இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இறுதியாக 75.5 ஓவர்களில் 205 ரன்கள் அடித்து தனது முதல் இன்னிங்சில் அணைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.
Mar-4-2021 15:32 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 70 வது ஓவரை அக்சர் பட்டேல் வீசிய முதல் பந்தில் டோம் பெஸ் ஆட்டமிழந்தார், அடுத்ததாக வீசிய மூன்றாவது பந்தில் டேனியல் லாரன்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Mar-4-2021 14:17 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டீ இடைவேளை விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 56 ஓவரில் 144 ரன்கள் அடித்து 5 விக்கெட் இழந்துள்ளதுள்ளது.
Mar-4-2021 13: 41 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 46 வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினர் அப்போது ஸ்டோக்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Mar-4-2021 13:33 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்துள்ளார். இது அவருக்கு 24 வது டெஸ்ட் அரை சதம்
Mar-4-2021 12:27 pm இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 28 ஓவரை சிராஜ் வீசினார் அப்போது பெர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யூ ஆகி 28 ரன்களில் வெளியேறினார்.
Mar-4-2021 12:14 pm இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ளது. மீண்டும் அஸ்வின் பந்து வீச தொடங்கியுள்ளார்.
Mar-4-2021 11:33 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 25 ஓவர்கள் முடிந்த நிலையில், இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்துள்ளது. மேலும் தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.
Mar-4-2021 11:015 இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை ஆர் அஸ்வினுக்கு எதிராக அடித்துள்ளார்.
Mar-4-2021 11:05 am இங்கிலாந்து அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அக்சர் பட்டேல் இதுவரை இந்த சீசன் டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆர் அஸ்வின் 22 விக்கெட்டுகளில் வீழ்த்தியுள்ளார். இன்னும் 2 விக்கெட்கள் வீழ்த்தினால் ஆர் அஸ்வின் சாதனையை முறியடித்து விடுவார்.
Mar-4-2021 10:57 am (IST)இங்கிலாந்து அணிக்கு மூன்றாவது டெஸ்டை போலவே இந்த போட்டியும் தடுமாற்றமாக உள்ளது 16 ஓவர்கள் முடிந்த நிலையில் 49/3 (16) ரன்களை எடுத்துள்ளது.அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்களையும் முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
Mar-4-2021 10:07 am (IST) இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணி :
இந்திய அணியில் பும்ரா வெளியேறிய நிலையில் முகமத் சிராஜ் இடம்பெற்றுள்ளார் .
இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்களாக டான் லாரன்ஸ் & டோம் பெஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டொமினிக் சிபிலி, ஜாக் க்ராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் (சி), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் ஃபோக்ஸ் (வார), டேனியல் லாரன்ஸ், டொமினிக் பெஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்