உலகக்கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஐபிஎல் 2024க்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இதுவரை 16 சீசன் ஐபிஎல் டி20 லீக் நடந்துள்ளது. 17-வது சீசனுக்கான ஏலம் துபாயில் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், அடுத்த ஆண்டில் ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கும், என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இன்று அதாவது நவம்பர் 26 ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 10 அணிகளும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
சென்னை அணி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட 8 வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது. அதன்படி, பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், அம்பதி ராயுடு, சிசாண்டா மகாலா, கைல் ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோரை சென்னை விடுவித்தது.
மும்பை அணி:
ஜோஃப்ரா ஆர்ச்சர் , முகமது அர்ஷத் கான், ராமந்தீப் சிங், ஹிரிதிக் ஷோகீன், ராகவ் கோயல், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர் ஆகியோரை அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் விடுவித்துள்ளது.
ராஜஸ்தான் அணி:
ஜேசன் ஹோல்டர், ஜோ ரூட் , அப்துல் பாசித், ஆகாஷ் வாஷிஸ்த், குல்தீப் யாதவ், ஓபெட் மெக்காய், முருகன் அஸ்வின், கரியப்பா, கே.எம் ஆசிப் ஆகியோரை அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்துள்ளது.
பெங்களூர் அணி:
வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல்,டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல்,கேதர் ஜாதவ் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப், தசுன் ஷனகா, யாஷ் தயல், கே. எஸ் பரத், சிவம் மாவி, ஊர்வில் படேல், பிரதீப் சங்வான் ஆகியோரை அணியிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் விடுவித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி:
ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ் , மனன் வோரா , ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, ஆர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர் ஆகியோரை அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட் விடுவித்துள்ளது.
டெல்லி கேப்பிடல் அணி:
ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோடி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க் ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.
கொல்கத்தா அணி:
ஷர்துல் தாகூர், ஷாகிப் அல் ஹசன், லிட்டில் தாஸ், ஆர்ய தேசாய், டேவிட் வீஸ், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், உமேஷ் யாதவ், டிம் சௌதி , ஜான்சன் சார்லஸ் ஆகியோரை அணியிலிருந்து கொல்கத்தா அணி விடுவித்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷாருக் கான், ராஜ் பாவா, பால்தேஜ் தண்டா, மோஹித் ரதீ, பானுகா ராஜபக்சே ஆகியோரை அணியிலிருந்து விடுவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…