IPL 2024 : ஐபிஎல் தொடரின் 2-வது பாதி அட்டவணையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் X தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு எப்போதெல்லாம் போட்டி நடைபெறும் என்பதை பார்க்கலாம் ..!
ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியாக ஜொலித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குஎப்போதெல்லாம் எந்தெந்த மைதானத்தில் போட்டி நடைபெற போகிறது, யாருடன் நடைபெற போகிறது என்பதை தனி அட்டவணையாக தற்போது பார்க்கலாம். ஐபிஎல் தொடரின் 17-வது சீசனாக தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பொடியாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும், பெங்களுரு அணியும் மோதியது.
இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதற்கு பிறகு பெங்களூரு அணியுடன் வருகிற மே-18ம் தேதி இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதுவே இந்த தொடரின் சென்னை அணிக்கு கடைசி போட்டியாகும்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் தலா 7 போட்டிகள் அவர்களது சொந்த மண்ணில் வைத்து நடைபெறும். அதன் படி பார்க்கையில் சென்னை அணிக்கு ஏற்கனவே சேப்பாக்கத்தில் ஒரு போட்டி நடந்து முடிந்துள்ளது. மேலும், 6 போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் அடுத்து சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடும் போட்டி கொல்கத்தா அணியுடன் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியான மும்பை அணியுடனான போட்டி வருகிற ஏப்ரல்-14 ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முறை மும்பை அணியுடன் ஒரு முறை மட்டுமே சென்னை அணி மோதுகிறது அதுவும் வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் என்பதால் இந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…