அதிரடி காட்டுமா ராஜஸ்தான்.? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி.! பிளேயிங் லெவன் இதோ…
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய, 5 போட்டியில் 4-ல் டெல்லி வெற்றி பெற்று மிகவும் வலுவாக இருக்கிறது.
மறுபுறம், ராஜஸ்தான் கொஞ்சம் தள்ளாடி வருகிறது. 6 போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஃபிளாட் பிட்ச் என்பதால், சிறிய பவுண்டரிகளுடன் இன்று டெல்லியில் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்.
போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் டெல்லி அணி பேட்டிங் செய்ய மைத்தனத்தில் களமிறங்க போகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ்:
கேப்டன் அக்சர் படேல் தலைமையிலான அணியில், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், கே.எல். ராகுல்,, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.