வணக்கம் டா மாப்ள! ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன் – ஹர்பஜன் ட்வீட்

Default Image

ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன் என்று தனது ட்விட்டரில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி ஐபிஎல் போட்டி.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக 8 அணிகளும் அணியில் உள்ள வீரர்களை விடுவித்து கொள்ளலாம்.
இந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி 5 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம் :

  • மோகித் சர்மா
  • சைதன்யா பிஸ்ரோய்
  • துருவ் சோரே
  • டேவிட் வில்லி
  • சம் பில்லிங்ஸ்

ஆனால் இந்த பட்டியலில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகி வந்தது.ஆனால் அவர் பெயர் இடம் பெறவில்லை.


இந்த நிலையில் இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு  ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,வணக்கம் டா மாப்ள! #CSK டீம் ல இருந்து இந்த ரிட்டென்ஷன் என்னாலயா.இல்ல உங்கனாலயா.தமிழூ..எத்தனையோ துரோகங்கள்,போலிகளுக்கு நடுவுல @ChennaiIPLஒரு”எல்டோரா”.என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு.இந்த @IPLRetention ல ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்