ஹீத் ஸ்ட்ரீக் இறக்கவில்லை நலமுடன் இருக்கிறார்! முன்னாள் வீரர் ஹென்றி ஒலோங்கா விளக்கம்!

henry olonga Heath Streak

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்தார் எனவும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துவிட்டதாகவும், தீயாக ஒரு செய்தி பரவி வந்தது. இந்த நிலையில், ஹீத் ஸ்ட்ரீக் இறந்துவிட்டதாக பரவி வரும் செய்தி வதந்தி எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும், முன்னாள் ஜிம்பாப்வே வீரரும் ஹீத்தின் நண்பருமான ஹென்றி ஒலோங்கா தனது ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக் உடன் ஹென்றி ஒலோங்கா வாட்ஸ்அப்பில் பேசிய உரையாடலை எடுத்து ஹென்றி ஒலோங்கா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருப்பதாக விளக்கம் கொடுத்துள்ளார். அந்த உரையாடலின் போது ஹீத் ஸ்ட்ரீக்  ‘நான் நலமாக இருக்கிறேன்  பரவி வரும் இந்த (வதந்தி) ரன்அவுட்டை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்” என கூறியுள்ளார்.

அந்த உரையாடலை பகிர்ந்து ஹென்றி ஒலோங்கா ஹீத் ஸ்ட்ரீக்  உயிரிழந்த செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் ” ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி தகவல். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர்  உயிருடன் இருக்கிறார் மக்களே” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் தான் இருக்கிறார் தற்போது பரவி வருவது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்