ஒருநாள் உலகக் கோப்பையில் இவர்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார்.! ஆகாஷ் சோப்ரா கணிப்பு.!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட பத்து நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியானது நடக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் உலக கோப்பை போட்டிக்கான எதிர்பார்ப்பதால் அதிகரித்து உள்ளது. இதற்கிடையில் கடந்த செப் 28ம் தேதி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிசெய்யப்பட்ட இந்திய அணியை பிசிசிஐயை அறிவித்தது. இதில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏனென்றால் போட்டியின் பொழுது பேட்டிங் எவ்வளவு முக்கியமோ அதை போல விக்கெட்டுகளை வீழ்த்துவதும் மிகவும் முக்கியம். அந்த வகையில் இவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டதற்கு பலரும் தங்களது பல முன்னாள் வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா 2023 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக இருப்பார் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், “உலக கோப்பை போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என நான் நினைக்கிறேன். இதனால் குல்தீப் யாதவ் உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.” என்று கூறினார்.
“எனவே குல்தீப் யாதவை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எவ்வாறு போட்டியின் போது பயன்படுத்துகிறார் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். எனது கணிப்புப்படி முதலில் ரோஹித் சர்மா குல்தீப் யாதவை மிடில் ஓவரில் பயன்படுத்துவார். 40 ஓவர்களுக்கு பிறகு அவர் பந்து வீசுவதை நம்மால் பார்க்க முடியும். அவர் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் வரை வீசலாம். நீங்கள் குல்தீப் வீசும் பந்தைத் தடுத்து திறமையாக விளையாடினால் உங்கள் விக்கெட்டை இழக்காமல் இருக்கலாம்.”
“ஆனால் நீங்கள் அவரை கவனிக்காமல் இருக்கும் பொழுது, உங்களது விக்கெட்டுகளை இழக்க நேரிடலாம். இதனால் குல்தீப் யாதவ் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ஒருவராகவும் இருக்கலாம். அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவும் இருக்கலாம்.” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகள் நடந்த ஒருநாள் உலகக் கோப்பைகளில் முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் ஆவர். அதன்படி, 2011 உலகக் கோப்பையில் ஜாகீர் கான் 21 விக்கெட்களும், 2015 உலகக் கோப்பையில் மிட்செல் ஸ்டார்க் 22 விக்கெட்டுகளும், 2019 உலகக் கோப்பையில் 27 விக்கெட்களும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.