அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
இந்த 2024 ஆண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருபவர் தான் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். இவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடருக்காக ரூ.20 லட்சத்திற்கு வாங்கி இருந்தது. அவர் வருவதற்கு முன்னாள் டெல்லி அணி வெற்றி பெற்றுருந்தாலும் ஒரு தாக்கத்தை ஏற்படத்தாமலேயே இருந்தது.
இவரை 6-வது போட்டியிலிருந்து எடுத்தது முதல் இவரது ஆட்டத்தால் டெல்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இவர் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 9 போட்டிகளில் விளையாடி 234 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா மண்ணை சேர்ந்த இந்த 22 வயது இளம் அதிரடி வீரரை ஆஸ்திரேலியா அணி வருகிற டி20க்கான ஆஸ்திரேலிய அணியில் எடுக்காமல் விட்டது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவரது திறமை மீது நம்பிக்கை வைத்த சௌரவ் கங்குலி இவருக்கு ஆதரவாக டெல்லி – லக்னோ இடையே நடந்த போட்டிக்கு நடுவில் பேசிய போது கூறி இருந்தார்.
இவர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை பற்றி பேசிய போது,”அவருக்கு வெறும் 22 வயதுதான் அவருக்கு கிரிக்கெட்டில் நீண்ட கால வாழ்க்கை இருக்கிறது. மேலும், ரிக்கி பொண்டிங் அவரை நன்றாக வழிநடத்துகிறார். அவரிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் மிகவும் பசியுடன் இருக்கிறார், அவர் அதிரடியாக விளையாட விரும்புகிறார்.
அவர் டி20 உலகக் கோப்பையைத் தவறவிட்டார் என்பது எனக்குத் தெரியும், அவர் ஆஸ்திரேலிய அணியில் இருந்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை, அவர் ஒரு கேம் சேஞ்சர் அதனால் இந்த டி20 கிரிக்கெட்டில் அவர் உங்களுக்குத் தேவை. ஆனால், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்ச் மார்ஷ்என்று பல நல்ல வீரர்கள் இருக்கும்போது, நீங்கள் இது போன்ற வீரரை இழக்க நேரிடும்.” என்று டெல்லி – லக்னோ இடையே நடந்த போட்டிக்கு நடுவில் சௌரவ் கங்குலி பேசி இருந்தார்.